நான் பூச்சியம்

கண் சிமிட்டும் நேரத்தில் ....
கணிதத் தேற்றங்களை நிறுவி......
விடையறியும்
எனக்கு ...
அவள் என் மனதுக்குள்.....
தந்து போகின்ற
காதல் மாயத் தோற்றங்களின்
பொருளறிய முடியவில்லை ......
இன்னும்
விஞ்ஞானமும் அத்துப்படி ....
எனக்கு
இருந்தும்....
அவள் சைகைகள் கூறும் .....
மெய்யின் விஞ்ஞானங்கள்
மட்டும் புரிவதில்லை
சுற்றாடலில் நான் புலி ....
எனினும் .
பதுங்கி விடுகிறேன் .......
அவள் சிற்றிடைப் .....
பார்த்ததும் ...
தமிழ் மொழியில்....
நான் அருவி .....
அவள் விழி பேசும் மொழிகள் மட்டும் ....
சூனியம் எனக்கு .....
ஆங்கிலத்தில் நான் சராசரி .....
ஏன் தொண்டைக்குள் எனக்கு...
ஆங்கிலத்தில் அடைப்பு ?/
அவளின் முன்னால் மட்டும்
தொழில்நுட்பம்.....
என் விரல் நுனிகளில் ....
அவள் இதழ் நுட்பம் மட்டும்
நான் அறியா ரகசியம் ....
இசையிலும் எனக்கு நாட்டம் .....
ஏனோ ஸ்வரங்களை.....
அடிக்கடி மறக்கிறேன் ...
..அவள் அசைகையில்
வரலாற்றிலும் இல்லை
எனக்குத் தகறாரு ....
அவள் குரல் கேட்டால்
பதற்றத்தில் ....
என் சொந்த வரலாறே ...........
மறந்து விடுகிறது ....
எனக்கு......
விளையாட்டிலும்
சளைத்தவன் அல்ல .....
நான்
நேருக்கு நேர் ....
தினம் தினம் தோற்கிறேன் ......
அவளிடம் மட்டும்
மலைத்துப் போவாள் .....
அந்த சரஸ்வதி தேவியே
கலைத் திறமையில்....
எந்தன் ... .
அவள் கூந்தல் களைக்கும்....
கலையிலேயே...
மரணித்துப் போகிறேன் ....
நான்.....
உயிரியல் எனக்கு உயிர் ....
உயில் எழுதி விட்டேன் .....
அவளுக்கு ...
என் உயிரையே