போதாதம்மா
காலை கோழி கூவுதம்மா..
கண் விழிக்க உன் முகமம்மா..
பல் துலக்க உன் விரலு..
பற்பசை எதுவும் இல்லையேம்மா..
குளிரும் தண்ணி வேண்டாமம்மா..
குளிக்க நானும் மாட்டேனம்மா..
எண்ணை தடவி தலை வாரி..
என்னை தினமும் அழகு பார்க்குற..
கண்ண இறுக்கி முடிக்குறேன்..
கன்னத்துல பவுடர் போட்டுவிடும்மா..
உன்னோட சோர ஊட்டிவிடுற..
உனக்கு மட்டும் பசிகாதாம்மா..
அப்பா கிட்ட வாங்கின அடிய..
அன்பா எனக்கு தரியேம்மா..
சட்ட பைய்யி பிஞ்சுடுச்சு..
சாயங்காலம் வந்து தைசுகுறேன்..
ஒத்த ரூபா நீ கொடும்மா..
ஓட்டை பையில போட்டுக்குறேன்..
கல்யாண வீட்டு மஞ்ச பை..
காணாம போன எழுத்தோட..
தூக்கி தோளில வச்சுக்கிட்டு..
தூரமா நானும் போவேனே..
டவுசர் போட்டு நான் தானே..
டயரு இல்லாம ஓடுறேனே..
குதிரை போல நான் தானே..
குதுச்சு குதுச்சு போறேனே..
அய்யனார் கோவில் வந்துடுச்சு..
அம்மாவ நீயும் பார்த்துகைய்யா..
பள்ளி மணி ஒலி கேட்டுடுச்சு..
பறப்பேன் நானும் உன் நினைவில்..
நல்லா படுச்சு ஒரு நாளு..
நானும் உன்ன பார்த்துக்குவேன்..
சவ்வு மிட்டாய் வேண்டாமம்மா..
சஞ்சயிக்கா பணம் நான் சேர்ப்பேன்..
மொத்த காசும் கிடைகுறப்ப..
முழு சேல வாங்க முடியுமாம்மா..
மதிய வேலை நேரத்திலே..
மனசு துடிக்குது உன்ன எண்ணி..
வெயிலே வெயிலே கொஞ்ச நேரம்..
வெண்ணிலவு போல ஆகிவிடேன்..
மரமே மரமே கொஞ்ச நேரம்..
மடி கொடு மடி கொடு என் தாய்க்கு..
பாட புத்தகம் படிபேன்ம்மா..
பாவி நம்ம விதி மாற..
வீட்டுக்கு நானும் வந்த உடன..
விளையாட போறேன் உன்னோட..
சிரிச்சு சிரிச்சி ஏமாத்துற..
சின்ன பையன்னு என்னைய நெனைச்சு..
ஒத்த ஜென்மம் போதாதம்மா.. உனக்கு
மொத்த கடனும் நான் அடைக்க..