பார்வையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்-வித்யா
போதும் ஓடியது
நிறுத்துங்கள்........
ஏன் இந்த தாகம்......?
இளைப்பாறுங்கள்
இரு நொடி....
என் கரம்
பற்றி என்னோடு வாருங்கள்......!
என் அதிசய
உலகிற்கு......!
அங்கே......
வண்ணத்து பூச்சிகள்
பன்னீர் தெளிக்கும்......
மின்மினிகள்
முத்தமிடும்........!
வானவில்கள்
குடை பிடிக்கும்.......!
தேவதைகள்
தேநீர் கொடுப்பார்கள்........!
வெண்ணிற
இரவுகளில் விண்மீன்கள்
பிரகாசிக்கும்........!
எல்லா காலங்களும்
வசந்த காலங்கள்
என மலரும்........!
சோலைகளில்
தெருக்களில்
கூரைகளில்
நதிகளில்
இதயங்களில்
எங்கெங்கிலும்
அன்பு நிறைந்திருக்கும்......!
என் அதிசய
உலகின் ரகசியம்
யாதெனில்........
மனித மனங்களை
ஒருவருக்கொருவர்
வாசிக்க முடியும்........!
ஆதலால்
ஒருவரைஒருவர்
நேசிக்க முடியும்
அன்பை
சுவாசிக்க முடியும்..........!
-அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்