இரண்டு கால் பிராணிகள் - மணியன்

பன்னீர் மரங்களின்
நிழல்வேண்டி
கண்ணீர் விதைகளைத்
தூவுகின்றோம். . . . . .

காற்றில் பறந்திடும்
சருகுகளாய்
காலம் முழுவதும்
பறக்கின்றோம். . . . .

கற்பனைப் படகின்
மேலமர்ந்து
கரைகாணாப் பயணம்
போகின்றோம். . . . .

இருப்பதைத் தொலைத்து
இங்குமங்கும்
இல்லாத எதையோத்
தேடுகின்றோம். . . . .

வரவின்றி வீணாய்ச்
செலவழித்து
வாடிய பயிராய்
துடிக்கின்றோம். . . . .

உழைப்பினை மறந்து
ஊழ்வினையின்
உன்னதம் படிந்து
உழல்கின்றோம். . . .

அடுத்தவர் கொடுப்பதை
எதிர்பார்த்து
ஆறாம் அறிவைத்
தொலைக்கின்றோம். . . . .

பெண்மையைப் போற்றிடத்
தயங்குகின்றோம்
பேரிடியென அவர்தலை
விழுகின்றோம். . . . . . .

இரண்டு கால்கொண்டு
புதுப்பிராணிகளாய்
சுரண்டி அடுத்தகுடி
கெடுக்கின்றோம். . . . . .

புனிதம் பெற்றோம்
இப்பிறவிபெற
மனிதம் மறந்து
திளைக்கின்றோம். . . . .

இனியும் இதுபோல்
வேண்டாமென
கனியும் காலம்வர
வகைசெய்வோம். . . . . . .


*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*

வளர்க தமிழ். .
வாழ்க தமிழர். .
ஓங்குக பாரதம். . - மணியன்

எழுதியவர் : மல்லி மணியன் (6-Mar-14, 2:03 am)
பார்வை : 608

மேலே