~என்னவள் நீ~
என்னை அனு தினமும் ஆதரிப்பவள் நீ...!
என்னை இசை கொண்டு ஈன்றாய் நீ...!
எனக்கு உதிரம் தந்து ஊவகை கொண்டாய் நீ...!
என் எண்ணம்! ஆனாய் நீ...!
என் இதயம் ஏந்திய முதல் தேவதை நீ...!
ஐந்தறிவையும் உணர்த்திய ஆறாம் அறிவு நீ...!
என் விழி ஒதுக்காத ஓவியம் நீ...!
ஔவை! சொன்ன முதுமொழி நீ...!
என் சினுங்களுக்கெல்லாம், பதிலான
அற்புதம் நீ...!
என் இன்னல்களை முன் உணர்ந்த,
அசரீரி நீ...!
நான் தேடிய முதல் தேடல் நீ...!
என் கவிதையாக வந்த என் அன்னை நீ.................!
-இவண்
கலை குரு.