gurukalai24 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : gurukalai24 |
இடம் | : நாமக்கல் |
பிறந்த தேதி | : 24-Aug-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 247 |
புள்ளி | : 25 |
நான் ஒரு பொறியியல் பட்டதாறி. எனக்கு, கவிதைகள் எழுத, படிக்க பிடிக்கும். ஓவியம் வரைய பிடிக்கும். கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவன்.
உன் நினைவால் சுடும் வெயிலையும் கூட ரசிக்க துணிந்தேன் - அதனாலே
தணலும் தயங்கி சென்றது..,
இவன் ரசனை இல்லை - சொரணை இல்லாதவன் என்று.
என்னை விட்டுச்சென்று என்
கல்லறை பயணத்திற்கு கொடி
அசைத்தவளே.!
நம் பாதங்கள் அறியும் நூற்றில்
நம் காலணி எதுவென,இருளிலும்.!
அதுபோல்
கல்லறை இருளில் நான் இருந்தாலும்
உன் பாதத்தின் பயணம் என்
கல்லறை நோக்கி வருவதை உணர்வேன்.!!
ஆயிரம் சுவாசங்கள் காற்றில்
கலந்தாலும்,உன் சுவாசத்தை
பிரித்து அறியும் அன்னமடி நான்.!!
நான் உன் வாசல் தேடி
வந்தபோது ஓடி வராத நீ.??
இன்று எங்கோ ஒரு கல்லறையில்
உறங்கும் போது தேடி வருவதேன்.??
உன் குற்ற உணர்ச்சிக்கு
மருந்து தேடி வந்தாயோ.?
கல்லறை புற்களும் நம் கதைகேட்டு
ஒப்பாரி வைக்கையில்.! எனக்கான
உன் அழுகை இன்னும் என் காதில்
விழவில்லையே.?
நம் காதலை ப
புதிது புதிதாக
கண்டுபிடிக்கிறேன் என்கிறாய்...
எதை
கண்டு பிடித்தாய் நீயாக...
அவன் காட்டித் தராமல்!
;
;
புதிது புதிதாக
படைப்புகள் படைக்கிறேன் என்கிறாய்....
எதை
படைத்து விட்டாய் நீயாக...
அவன் படைத்திராத ஒன்றைக் கொண்டு!
/
/
ஒன்றை மறைத்து வைத்தலே
கண்டுபிடிக்க காரணியும், காரணமும்;
கண்டு பிடித்தலுக்கான தூண்டல்
மறைத்து வைத்தல்....
/
/
நீ
கண்டு பிடித்ததையும்
படைத்ததையும்
உண்மையாக கண்டும், படைத்ததும்
நீயா...
/
/
நீயென்றால்
நீயாக படைத்தது எது...
முன்னர் படைத்த எதைக் கொண்டும்
அல்லாமல்...
/
/
அல்லாமல்
படைத்தாயென்றால்
நீ
படைப்பாளி.....
/
/
உன்னால் செய்யப்பட்டதெல்லாம்
ஆறடி வளர்ந்த என்னை,
ஆளாக்க துடிக்கும் என் அன்னை...
ஆறடி நிலத்தை முத்தமிடும் முன்...
அவள், அயர்ந்து என் மடியில் உறங்க என்ன-தவம் செய்தேனோ... இப்பிறவியில்-என்னை
ஈன்ற பொழுது அவள் கொண்ட உவகையை, இப்பொழுது நான் கொண்டேன்...
பிள்ளைகளே!, முடிந்தால் முயன்று பாருங்கள், நீங்களும் உங்கள் தாய் கண்ட உவகையை உணருங்கள்....
ஆறடி வளர்ந்த என்னை,
ஆளாக்க துடிக்கும் என் அன்னை...
ஆறடி நிலத்தை முத்தமிடும் முன்...
அவள், அயர்ந்து என் மடியில் உறங்க என்ன-தவம் செய்தேனோ... இப்பிறவியில்-என்னை
ஈன்ற பொழுது அவள் கொண்ட உவகையை, இப்பொழுது நான் கொண்டேன்...
பிள்ளைகளே!, முடிந்தால் முயன்று பாருங்கள், நீங்களும் உங்கள் தாய் கண்ட உவகையை உணருங்கள்....
வான் மழையை
வடி கட்டி
வாய்க்காலின் வழிவிட்டு
வயலுமதில் வரப்பு வெட்டி
வளம் காணப் போகின்றாயா. . . .
**********
அடுத்த வேளை
அமுது வேண்டி
அன்னார்ந்து பார்த்து மனம்
அசை போடும்
அறியாதவன் தன்னை
அரவணைக்கப் போகின்றாயா. . . .
**********
பள்ளி செல்லும்
பருவம் வந்தும்
பணி செய்து
பட்டினியின் சுவடுகளேப்
பாதம் எனக் கொண்டு வாழும்
பாட்டாளிச் சிறுவனுக்கு
படிப்பளிக்கப் போகின்றாயா. . . . .
**********
எங்கு நோக்கின்
கலவரமாம் . .
இல்லாத நிலை
இங்கு நிலைத்திடவே
பொல்லாத பேருக்கெல்லாம்
புத்தி சொல்லப் போகின்றாயா. . . .
**********
பெண்குலம் இழிவு செய்யும்
ப
என்னை அனு தினமும் ஆதரிப்பவள் நீ...!
என்னை இசை கொண்டு ஈன்றாய் நீ...!
எனக்கு உதிரம் தந்து ஊவகை கொண்டாய் நீ...!
என் எண்ணம்! ஆனாய் நீ...!
என் இதயம் ஏந்திய முதல் தேவதை நீ...!
ஐந்தறிவையும் உணர்த்திய ஆறாம் அறிவு நீ...!
என் விழி ஒதுக்காத ஓவியம் நீ...!
ஔவை! சொன்ன முதுமொழி நீ...!
என் சினுங்களுக்கெல்லாம், பதிலான
அற்புதம் நீ...!
என் இன்னல்களை முன் உணர்ந்த,
அசரீரி நீ...!
நான் தேடிய முதல் தேடல் நீ...!
என் கவிதையாக வந்த என் அன்னை நீ.................!
-இவண்
கலை குரு.
உன்னை போல் உறவுகள், என் வாழ்க்கையை வளமாக்க...
நான், யாரென்ற உண்மையை நீ எனக்கு சொன்னாய்...
உன், வரவால் சருகாண என் உலகம், புத்துயிர் பெற்றது...!
உன்னுயிர், தந்த என்னவளோ! இன்னுயிரை கொடுத்து-துயில் கொண்டால்
நிறந்தரமாக.... - அப்பொழுது, நான் இருக்கிறேன் என்று.....
புன்னகைத்தாயோ..! என்னவோ!- உன் கையில்
உலகம் உள்ளதென்று...
உன்னை போல் உறவுகள், என் வாழ்க்கையை வளமாக்க...
நான், யாரென்ற உண்மையை நீ எனக்கு சொன்னாய்...
உன், வரவால் சருகாண என் உலகம், புத்துயிர் பெற்றது...!
உன்னுயிர், தந்த என்னவளோ! இன்னுயிரை கொடுத்து-துயில் கொண்டால்
நிறந்தரமாக.... - அப்பொழுது, நான் இருக்கிறேன் என்று.....
புன்னகைத்தாயோ..! என்னவோ!- உன் கையில்
உலகம் உள்ளதென்று...