புவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  புவி
இடம்:  thirumayam
பிறந்த தேதி :  03-Apr-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-Feb-2014
பார்த்தவர்கள்:  315
புள்ளி:  63

என் படைப்புகள்
புவி செய்திகள்
புவி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2020 5:22 pm

எள்ளு வய காவ காக்கும் எங்க ஊரு அய்யனாரே..
வீடு வரைக்கும் போயி வாரேன் வெளஞ்ச காட்டை பாத்துக்கங்க..

தானியம் எடுத்துப் போக மஞ்சக் குருவி ரெண்டு வரும்,
வெரட்டி விட்டுராதீக..
மூலப் பனைமரத்துல, அதுக மூணு குஞ்சு பொருச்சிருக்கு..

கருத்த பசுவொன்னு கன்னோட வரும்,
பத்தி அனுப்பிராதீக பாவம் தண்ணி குடிச்சிக்கிடட்டும்..

ஒத்தையில விட்டுப் போறேன்னு ஒண்ணும் நெனச்சுக்காம, சிட்டுக்குருவிக சிறகசைக்கிறதையும்,
வரப்புத் தோட்டுல வயநண்டு எட்டிப் பாக்குறதையும்,
வேடிக்கைப் பாத்துருங்க வெரசா வந்துருவேன்..!

மேலும்

புவி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2020 5:09 pm

இரயில்வே பிளாட்பாரத்தின் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கிறேன்..

அரை மணிக்கொரு முறை கடந்து செல்லும் இரயில்களை போல, வாழ்க்கையை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடிவதில்லை...

இரண்டு நாட்களாக பட்டினியில் கிடக்கிறேன்..
கைகளை ஏந்தி பிச்சை கேட்குமளவிற்கு உடம்பில் தெம்பில்லை..

வயிறு காய்ந்து கிடக்கிறது..
கண்களில் ஈரம் பெருக்கெடுக்கிறது.. பசியோடு போராடிக் கொண்டிருக்கிறேன்..
அநேகமாக அடுத்து வரும் இரயில் தான், என் வாழ்வில் நான் பார்க்கவிருக்கும் கடைசி இரயிலாக இருக்க கூடும் என்ற பேராவலோடு, ஒவ்வொரு முறையும் அடுத்த இரயிலுக்காய் காத்திருக்கிறேன்..!

மேலும்

புவி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2015 2:59 pm

ஒரு கோப்பை தேநீர்,
மழையை அதிகமாக,
ரசிக்க வைப்பதை போல...

கோபம்,
உன் காதலை,
வெகுவாக உணர வைக்கிறது...!

மேலும்

அழகான வருடல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Nov-2015 4:48 pm
புவி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2015 2:08 pm

எல்லா கனவுகளும்,
ஒருநாள் நிஜமாகும்..
எல்லா முயற்சிகளும்,
ஒருநாள் வெற்றியாகும்...
ஆனால்,
கனவுகளும் முயற்சிகளும் முழுமையடைய,
நம்பிக்கை வேண்டும்...!

நாளை எழுந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்தானே,
இன்று உறங்குகிறோம்?

மேற்கில் விழுந்த சூரியன்,
கிழக்கில் மீண்டும் உதிக்காமலா போய்விடுகிறது?

இது உலக நியதி..

இளைய சமுதாயமே..
இன்னும் யார் வந்து சொல்ல வேண்டும் உனக்கு..?

முதல் அடியிலேயே,
விழாமல் நடந்துவிட்டதா நம் மனிதம்..?

இன்று இல்லை என்றால் நாளை...
நாளை இல்லை என்றால் மறுநாள்..
ஆனால்,
எப்படியும் வெற்றியை,
எட்டிப்பிடிப்போம் என்பதுதானே நம்பிக்கை..!

உனது ஒவ்வொரு வெற்றியிலும்,

மேலும்

நாளை எழுந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்தானே, இன்று உறங்குகிறோம்? மேற்கில் விழுந்த சூரியன், கிழக்கில் மீண்டும் உதிக்காமலா போய்விடுகிறது? அருமை அருமை ... 30-Jan-2015 7:33 pm
உனது ஒவ்வொரு வெற்றியிலும், உலகம் ஒரு அடி முன்னேறுகிறது.. அருமை 30-Jan-2015 3:33 pm
புவி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Jul-2014 3:25 pm

வியர்க்கும் போதெல்லாம்,
முத்தமிடுவது,
என் பழக்கம்...

-கைக்குட்டை..!

மேலும்

அருமையன் (அருமையான) 12-Feb-2015 10:26 pm
அருமையன் படைப்பு 11-Feb-2015 5:25 pm
நன்றி.. 30-Jul-2014 4:00 pm
செமயா இருக்குது 26-Jul-2014 5:19 pm
புவி அளித்த படைப்பில் (public) முத்துப் பிரதீப் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Feb-2014 11:32 am

உன் மூச்சுக்காற்று,
என் மீது படும் போதெல்லாம்,
உணருகிறேன்....

கார்பன்-டை-ஆக்ஸைடில்
காதலும் இருப்பதை....!

மேலும்

அழகு..... 22-Jul-2014 4:07 pm
நன்றி அம்மா.. 22-Jul-2014 3:11 pm
கருத்துக்கு நன்றி சகோதரமே.. 22-Jul-2014 3:10 pm
நன்று ( மணியன் ), 03-Mar-2014 11:15 pm
புவி - புவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2014 6:23 pm

உன்னை நினைப்பதும்,
வலிக்கின்றது..
மறப்பதும் வலிக்கின்றது..
ஒன்று மட்டும்,
புரிகின்றது...
வலித்தால்தான்,
காதல் இனிக்கின்றது....!

மேலும்

வழியும் இனிப்பு வலி தரும் காதலில் 22-Jul-2014 5:12 pm
நன்றி சகோ... 04-Jul-2014 12:03 pm
உண்மைத்தானே.. இன்பமான வலி அல்லவா.. நன்று நன்று 03-Jul-2014 6:54 pm
Nethra அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Jun-2014 6:48 am

தேடியதாலே தொலைந்தேன்
நடந்ததாலேயே பாதை இழந்தேன்
பார்த்ததாலே குருடானேன்
பேசிப் பேசி மொழியிழந்தேன்

நினைத்ததாலேயே நெஞ்சமிழந்தேன்
யோசிக்க யோசிக்க அறிவையும் இழந்தேன்
கேட்டுக் கேட்டு கேள்வியற்றுப் போனேன்
எழுதியதாலே வார்த்தையும் மறந்தேன்

தீண்டத் தீண்ட என் தேகமிழந்தேன்
உன் ஓர் உறவுக்காய் இவ்வுலகையே இழந்தேனே !
என்னையும் இழந்தேன் உன்னைப் பெற
இதைத்தானா காதலென்பது ?!

மேலும்

அசைக்க முடியாத உண்மை ,அழகான கவிதை வரிகள் ..... 13-Jun-2014 10:30 am
அருமை.. 13-Jun-2014 9:43 am
அட... காதல்! காதல்! நன்று! 13-Jun-2014 6:12 am
நீங்க நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி சார். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவீங்க. சும்மா தமாஷ் ! (தவறாக எண்ண வேண்டாம் ) 06-Jun-2014 7:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (55)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
தாரிணி

தாரிணி

Puducherry

இவர் பின்தொடர்பவர்கள் (56)

இவரை பின்தொடர்பவர்கள் (55)

M.A.பாண்டி தேவர்

M.A.பாண்டி தேவர்

உசிலம்பட்டி
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே