புதிய உலகு செய்வோம்

எல்லா கனவுகளும்,
ஒருநாள் நிஜமாகும்..
எல்லா முயற்சிகளும்,
ஒருநாள் வெற்றியாகும்...
ஆனால்,
கனவுகளும் முயற்சிகளும் முழுமையடைய,
நம்பிக்கை வேண்டும்...!
நாளை எழுந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்தானே,
இன்று உறங்குகிறோம்?
மேற்கில் விழுந்த சூரியன்,
கிழக்கில் மீண்டும் உதிக்காமலா போய்விடுகிறது?
இது உலக நியதி..
இளைய சமுதாயமே..
இன்னும் யார் வந்து சொல்ல வேண்டும் உனக்கு..?
முதல் அடியிலேயே,
விழாமல் நடந்துவிட்டதா நம் மனிதம்..?
இன்று இல்லை என்றால் நாளை...
நாளை இல்லை என்றால் மறுநாள்..
ஆனால்,
எப்படியும் வெற்றியை,
எட்டிப்பிடிப்போம் என்பதுதானே நம்பிக்கை..!
உனது ஒவ்வொரு வெற்றியிலும்,
உலகம் ஒரு அடி முன்னேறுகிறது..
நண்பனே..வா...
சேர்ந்து நடக்கலாம்..
தூரம் கடக்கலாம்...
வெற்றியோடு வாழலாம்..
ஒரு புதிய உலகை,
படைத்துவிட்டு சாகலாம்...!