மாயக் காதல்

தேடியதாலே தொலைந்தேன்
நடந்ததாலேயே பாதை இழந்தேன்
பார்த்ததாலே குருடானேன்
பேசிப் பேசி மொழியிழந்தேன்

நினைத்ததாலேயே நெஞ்சமிழந்தேன்
யோசிக்க யோசிக்க அறிவையும் இழந்தேன்
கேட்டுக் கேட்டு கேள்வியற்றுப் போனேன்
எழுதியதாலே வார்த்தையும் மறந்தேன்

தீண்டத் தீண்ட என் தேகமிழந்தேன்
உன் ஓர் உறவுக்காய் இவ்வுலகையே இழந்தேனே !
என்னையும் இழந்தேன் உன்னைப் பெற
இதைத்தானா காதலென்பது ?!

எழுதியவர் : நேத்ரா (2-Jun-14, 6:48 am)
Tanglish : maayak kaadhal
பார்வை : 173

மேலே