அவளுக்காக சிலவரிகள்

" அவளுக்காக சிலவரிகள்..!! "

~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~

எனக்காக காத்திருக்க வேண்டாம்
என் எழுத்துக்களை பார்த்திரு அதுபோதும்!

~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~

என்னை பார்க்க வேண்டாம்
என் எழுத்துக்களை படி அதுபோதும்!

~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~

என்னை நேசிக்க வேண்டாம்
என் எழுத்துக்களை வாசி அதுபோதும்!

~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~

எனக்கு முத்தமிட வேண்டாம்
என் எழுத்துக்களை சத்தமிடு அதுபோதும்!

~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~

எனக்கானவளாக இருந்திட வேண்டாம்
என் எழுத்துக்கானவளாக இருந்திடு அதுபோதும்!

~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~@~

எழுதியவர் : சீர்காழி சபாபதி (2-Jun-14, 12:10 am)
பார்வை : 277

மேலே