காதலிக்கு ஒரு கடிதம்

கோவம் ஏனடி சொல்லு கண்மணி
கொஞ்சி பேசடி என் செல்ல பெண்மணி
நெஞ்சமெல்லாம் ஏக்கத்தில் தவிக்குதடி
உன் அன்பான பேச்சுக்கு ஏங்குதடி
கண்கள் இரண்டும் கண்ணீரால் மூழ்குதடி
உன்னோடு காதலித்த நாட்களை நினைத்தபடி
என்னிடத்தில் நீ எதிர் பார்க்கும் அன்பை
நான் உன்னிடத்தில் எதிர் பார்ப்பதில் தவறு என்ன
கண்மூடி அன்பு செய்யும் என்னை - நீ
கொஞ்சம் கண் திறந்து பார்த்தால் என்ன
நெஞ்சோடு கலந்திட்ட பெண்ணே என்னை
சோகத்தில் மிதக்க வைப்பது என்ன
வீண் கோபம் காட்டும் பெண்ணே
என் நெஞ்சம் புரிந்து நடந்தால் என்ன
ஒரு பொண்ணு தேவை இல்லை எனக்கு
உன் அன்பு தேவைதான் இருக்கு
கண்கள் மூடினாலும் எனக்கு
உன் கனவு தூரலாய் இருக்கு
நெஞ்சில் மோதுதே உன் நினைப்பு
நித்தம் நான் வேண்டுவதே உன் அரவணைப்பு.....