ஹைக்கூ சென்றியு கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

மேகங்களின் மோதல் மின்னல்
விழிகளின் மோதல்
காதல் !

புவி ஈர்ப்பு சக்தியை
வென்றது
விழி ஈர்ப்பு சக்தி !

பேசாவிட்டாலும்
பார்வையாலேயே
பசியாறி விடுகின்றனர் !

நடந்து செல்கையில்
திரும்பி ஒரு பார்வை
அதிர்வலைகள் !

இமைக்காமல் பார்ப்பதில்
அவளுக்கு நிகர்
அவளே !

காந்த அலை
வீசும்
கண்கள் வலை !

பரவச நிலை
மிதக்கும் கலை
காதல் !

பார்க்காததால்
வரையவில்லை
இரவிவர்மன் !

காதலன் விழிகளுக்கு
அவன் காதலி
பேரழகி !

அடிக்கடி
சந்திக்கின்றன
மனஅலைகள் !

சிலையே
சிலையை ரசித்தது
கோவிலில் அவள் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (1-Jun-14, 8:49 pm)
பார்வை : 113

மேலே