என்ன செய்யப் போகிறாய் - மணியன்

வான் மழையை
வடி கட்டி
வாய்க்காலின் வழிவிட்டு
வயலுமதில் வரப்பு வெட்டி
வளம் காணப் போகின்றாயா. . . .
**********

அடுத்த வேளை
அமுது வேண்டி
அன்னார்ந்து பார்த்து மனம்
அசை போடும்
அறியாதவன் தன்னை
அரவணைக்கப் போகின்றாயா. . . .
**********

பள்ளி செல்லும்
பருவம் வந்தும்
பணி செய்து
பட்டினியின் சுவடுகளேப்
பாதம் எனக் கொண்டு வாழும்
பாட்டாளிச் சிறுவனுக்கு
படிப்பளிக்கப் போகின்றாயா. . . . .
**********

எங்கு நோக்கின்
கலவரமாம் . .
இல்லாத நிலை
இங்கு நிலைத்திடவே
பொல்லாத பேருக்கெல்லாம்
புத்தி சொல்லப் போகின்றாயா. . . .
**********

பெண்குலம் இழிவு செய்யும்
பண்பு கெட்ட மாந்தரெலாம்
பிடறி கால்
படவே ஓட
புறங் காணப் போகின்றாயா. . . .
**********

பொல்லாத குடிப் பழக்கம்
இல்லாத வகைச் செய்ய
பொருப்புடனே நீயும் வந்து
போதி மரப் புத்தன் போல
போதனை தரப் போகிறாயா. . . .
**********

வருவது வரட்டுமென்று
வானுயரத் தோளுயர்த்தி
வஞ்சகரை கருவறுக்கும்
வேள்வி செய்யப் போகின்றாயா. . . . .
**********

காம இச்சைத் தணிக்கவெண்ணி
கண்மூடிக் காதல் செய்து
கன்னியர் வாழ்வழிக்கும்
காமுகரைப் பிளந்து நீயும்
கலிங்கத்துப் பரணி கண்டு
களம் காணப் போகின்றாயா. . . . . .
**********

ஒன்றாவது செய்
இன்றாவது செய்
ஏதாவது செய்
தோதானது செய். . .
செய். . . செய். . . . செய். . .
தென்னவனே மன்னவனே
தூதுவனே காவலனே. . .
தெள்ளு தமிழ்க் கோமகனே. . . .
தேடக் கிடையா மனதுள்ளவனே. . . . .



*-*-*-*-*-*====--*-*-*-*-*-*====-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (7-Mar-14, 2:10 am)
பார்வை : 203

மேலே