சூஃபி கவிதை - சூஃபி கவிஞர் அஹமது அலி

புதிது புதிதாக
கண்டுபிடிக்கிறேன் என்கிறாய்...
எதை
கண்டு பிடித்தாய் நீயாக...
அவன் காட்டித் தராமல்!
;
;
புதிது புதிதாக
படைப்புகள் படைக்கிறேன் என்கிறாய்....
எதை
படைத்து விட்டாய் நீயாக...
அவன் படைத்திராத ஒன்றைக் கொண்டு!
/
/
ஒன்றை மறைத்து வைத்தலே
கண்டுபிடிக்க காரணியும், காரணமும்;
கண்டு பிடித்தலுக்கான தூண்டல்
மறைத்து வைத்தல்....
/
/
நீ
கண்டு பிடித்ததையும்
படைத்ததையும்
உண்மையாக கண்டும், படைத்ததும்
நீயா...
/
/
நீயென்றால்
நீயாக படைத்தது எது...
முன்னர் படைத்த எதைக் கொண்டும்
அல்லாமல்...
/
/
அல்லாமல்
படைத்தாயென்றால்
நீ
படைப்பாளி.....
/
/
உன்னால் செய்யப்பட்டதெல்லாம்
அவனாலே செய்யப்பட்டது...
அவனாலே செய்யப்பட்டதெல்லாம்
உன்னால் செய்யப்படாது....

எழுதியவர் : சூஃபி கவிஞர் அஹமது அலி (17-Oct-14, 8:34 am)
பார்வை : 700

மேலே