உன் மொவுனத்திற்கு பின்

இருளோடு அறைகள் இனக்காக
தழுவிகொண்டிருக்கிறது
முககண்ணாடி விரிசலால்
முகம் அடக்கம் செய்யபடுகிறது
முகவரி கிழிந்த தாபால் போல
தூக்கி எறியபடுகிறேன்
பூட்டப்பட்ட அறையில் கால் ஒடிந்த நாற்காலியாக
அடைபடுகிறேன் ஒரு அகால மரணத்துக்குரிய முகமாக
வாழ்வின் வாதை அறியபடுகிறேன் உன் மொவுனத்தில்
என்
மரணத்திற்கு பின்
கனவு சொற்கள் மொழிப்பெயர்த்து வாசித்து கொள் என் வலியை !!