+காதலாகவும் இருந்திருப்பேன்+

சில நினைவுகளை
நினைக்கும் போதே
சில்லென்று இருக்கும்...
அந்த நினைவுகளில்
உனக்கு கண்டிப்பாய்
இடமொன்று இருக்கும்...
நானும் உனக்கு
அப்படியே இருந்திருந்தால்...
இன்று..
கவிதைகளில் மட்டும் இல்லாமல்
காதலாகவும் இருந்திருப்பேன்...
வார்த்தைகளில் மட்டும் இல்லாமல்
வாழ்க்கையாகவும் இருந்திருப்பேன்...