விழுவதிலா இன்பம் எழுவதிலா இன்பம்

விழுவதிலா இன்பம் எழுவதிலா இன்பம்
இதிலெதில் இன்பம் என் தோழா
விழுந்திடக் காதலில் எழுந்திடும் இன்பம்
என்பேன் என் தோழா

இருபதில் விளைந்த இன்பம் எழுபதில்
வருமா சொல் என் தோழா
இளமை மனமிருந்தால் என்பதிலும் இன்பம்
வருமென்று சொல்வேன் என் தோழா

காசிக்குச் செல்பவர்கள் காதலை மட்டும் ஏனோ
கங்கையில் விடுவதில்லை என் தோழா
காதலை விடுத்தபின் சாதலே மேன்மை என்று
கருருதுவார் விடுவாருயிர் என் தோழா

எழுதியவர் : (6-Mar-14, 12:46 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 95

மேலே