இலஞ்சம்

உயிரற்ற இந்த
அட்டைப் புழுக்களை
அழிப்பதென்பது
ஏனோ !
கேள்விக்குறி தான்

இரத்தம் உறிஞ்சும்
அட்டையை கூட
இலகுவில்
கழட்டி விட முடியும்
இந்த லஞ்சத்தை
குடிக்கின்ற அட்டைகளை
ஒழிப்பதென்பது
??????????

மறைவாக செய்த
காலம் போய்
கட்டாயம்
கொடுத்தால் தான்
காரியம் நிறைவேரும்
என்ற கட்டம்
இன்று...

தாய், பிள்ளை
பாசத்தை கூட
தாங்கிப்படிப்பது
லஞ்சம் என்னும்
போது தான்
தாங்குதில்லை
நெஞ்சம்...

சமூகத்தில் ஒட்டி
இருக்கும்
உயிரற்ற அட்டையை
ஒழிப்பதென்பது
அவர் அவர்
பெறுவதை
விடுவதில் தான்
உள்ளது...

எழுதியவர் : எம். ஏ. அஸ்ரப் ஹான் (7-Mar-14, 1:39 pm)
Tanglish : elanjam
பார்வை : 78

மேலே