எந்தமிழ்நாடு
செம்மாந்திருந்த வீரர்கள் சீறுகின்ற நேரம்
செருக்களப் புழுதி திசை மறுக்கின்ற காலம்
அம்மாந்திருந்த அன்றலர்ப் பொழுது அதிர்விரைவில் கழுவேறுகின்ற ஞாலம்
திங்காத பற்கள்,திமரில் கனைத்தெழும் தோள்கள்
மங்காத மேனி மாமரக் கிளைபோல்,
ஆங்கவர் கையிணைத்து நிற்கும் சீரிய காட்சி!
ஆயுத மேந்திய நரம்புக்கரங்கள்
பாயுது இந்திய சிங்கங்கள்
தோய்ந்திடும் கதிரவன் ஒளியில்
பாய்ந்திடும் பகீரென்ற வெளிச்சம்
ஆராய்ந்தது அந்நேர சூழல்
வேராய்ந்த வெற்றிமர நிழல்!
கூராய்ந்த கொள்கைவேல்,கத்திகள்
நாராய்ந்த எதிரிகள் கத்தினார்கள்
சீரான சீர்த்தமிகு புத்திகள்
நேரான வார்த்தெடுத்த யுத்திகள்!
இதை யாராலும் கணிக்க் முடியவில்லை!
எங்கள் தமிழ்நாடென்பதை உணரவும் இல்லை!
-இளந்தமிழ்க்
கவிஞன்.
வம்தமிழ்.