மகளிர் தினத்தில் இன்று

மகளிர் தினத்தில் இன்று!
.
மாதராய்ப் பிறப் பதற்கோ
மாதவம் செய்தனரோ வென
ஏங்கிய கவிஞரும் விரும்பி
மாதராய்ப் பிறப்பரோ இன்று..
மகளீர் படுந் துயரங்களை
மனந் தாங்கிக் கொள்வரோ!

மகளீர் தின நாளின்று
மகளீர்க்கோ மகிழ்ச் சியில்லை.
மகளீரும் மனித ரென்றே
மதிக்கத் தெரியா நாய்களால்..
மலர் சூடும் பெண்டீரினி
மடிக் கத்தி சூடுவரோ!

ஆசைப் பொருளோ மாதரும்?.
அலையும் வேசைப் பயல்களே!
மானுடமே தலை குனிந்து
மனம் நொந்து துடிக்கிறதே!
வெறி நாய்கள் ஒழிப்போமே!
வேலு நாச்சி எழுமுன்னே.

கோ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (8-Mar-14, 10:54 am)
பார்வை : 241

மேலே