+உலகின் ஒளிவிளக்கே வணங்குகிறேன் உன்னை+
அரிவை தெரிவை
அங்கனை ஆட்டி
அணங்கு ஆடவள்
இளம்பிடி பெதும்மை
கரிகுழல் காரிகை
காந்தை மடந்தை
சிறுமி
பாவை பிரியை
பெண்டு பிணா
பேதை வனிதை
மகடூஉ மாது
மங்கை மானினி
நல்லாள் மாயோள்
நாரி சுந்தரி
தையல் தளிரியல்
எனவெல்லாம் தமிழில் அழகாய் அழைக்கப்படும் பெண்ணே
நீ தாயைப்போல் வழிநடத்திச்செல்வாய் எங்கள் முன்னே
துன்பம் தருவோரை நீ தள்ளிவிடு பின்னே
உலகின் ஒளிவிளக்கே வணங்குகிறேன் உன்னை