மகளிர் தினமாம் வேடிக்கை

இங்கே பெண்ணாய் பிறக்கவே
உரிமையில்லை
பிறந்தால் வீட்டிலும்
ஆணுக்கு நிகராய்
மதிப்பு இல்லை
கல்வி வேலை
காதல் திருமணம் எதிலும்முடிவெடுக்கும்
உரிமை இல்லை
அரசியலிலும் கூட
சரி நிகர் சமானமல்ல
விளையாட்டில் கூட
ஆதரவில்லை
பெண் என்பவள்
மதுவை போல
ஒரு போகப் பொருள்
கட்டிலில் அனுசரித்து
தொட்டிலை நிரப்பும்
வேலைக்காரி
வீதியில் இறங்கி
தனித்து நடக்க இயலா
பாவப் பட்ட பெண் பிறவி
பெண்ணின் உடலிலா
சொர்க்கம் புதைதந்திருக்கு
கண்ணுக்கு தெரிந்து
ஒரு உமா மகேஸ்வரி
கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ?
பெண்ணுக்கு விழா வைத்து
கொண்டாட வேண்டாம்
மகளிர் தினம் என்னும்
வெளிப்பூச்சு வேண்டாம்
சதை கொண்ட உடலாய்
உயிர் கொண்ட ஜீவனாய்
எண்ணி நடந்தாலே போதும்...

எழுதியவர் : சித்ரா ராஜ் (8-Mar-14, 11:16 am)
பார்வை : 112

சிறந்த கவிதைகள்

மேலே