சடலம் - கே-எஸ்-கலை

வெறிக்கும் பூனை
கடற்கரையின் ஓரம்
திமிங்கிலச் சடலம் !
==
சுடுகாட்டு நடுவில்
ஓநாய்கள் குதறும்
வெட்டியான் சடலம் !
==
மேசையின் மீது
அழகாய் சிரிக்கும்
பூவின் சடலம் !
==
வீடு கட்டும்
பறவைக் கூட்டம்
மரத்தின் சடலம் !
==
வெளிச்சம் தரும்
விடியும் தருணம்
இருளின் சடலம் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (9-Mar-14, 2:45 pm)
பார்வை : 223

மேலே