நண்பர்களை நேசிப்போம் நட்பை சுவாசிப்போம்
நண்பர்களை நேசிப்போம் நட்பை சுவாசிப்போம்...
சினேகத்தை விட தேடிக்கெள்ள வேண்டிய சிறப்புடையது வேறு என்ன இருக்கிறது. நல்லவர்களுடைய சினேகம் சந்திரனை போல் நாளுக்கு நாள் வளரும்.மேலும் நயமான ஒரு நுலை படிக்க படிக்க அதன் சிறப்பு அதிகமாக புலப்படுவது போல நல்ல குணம் உள்ளவர்களுடைய நட்பு பழக பழக இன்பம் அதிகரிக்கும். ஒருவரோடு ஒருவர் நட்பு கொள்வது இன்பமானவற்றை பேசி சிரித்து மகிழ்வதற்கு மட்டுமல்ல.ஒருவர் ஒரு குற்றம் செய்தால் மற்றவர் அதை எடுத்துகாட்டி இடித்து திருத்தும் நட்பு தான் உண்மையான நட்பு.. ஒருவரை ஒருவர் கூடி பேசுவதால் உண்டாகிற உறவு நட்பாகாது. பின் எதனால் என்றால் ஒத்த உணர்ச்சி இருந்தால் அதுவே நட்பின் உரிமைகளை உண்டாக்கும். உணர்ச்சிகள் பொருந்தாமல் கூடி பேசுவதால் மட்டும் உண்டாகிற உறவு நட்பாகாது. அவனுக்கு தெரியாமலே அவனுக்குள்ள திறமைகளை வெளிகொணரும் கருவிதான் நட்பு. தாய்க்கு ஈடான உறவு ஒன்று இருக்கிறது என்றால் அதுவே உண்மையான நண்பனின் நட்பு.. BY SINDHU KASTHURI