கண்ணாமூச்சி காதல்

நீ என்னுடன்
விளையாடுகிறாய்
கண்ணாமூச்சி ஆட்டம்

நானும் அது
தெரியாமலேயே
விளையாடுகிறேன்

தோற்பது நானென்றாலும்
பிடிக்கவே செய்கிறது
உன்னிடம் தோற்க..

ஏதோ சில வேளை
சிறு கோபத்தில்
உன்னை திட்டினாலும்

என்னையா? இப்படி
சொல்கிறாய்
என கேட்டதும்

உன் மனம்
வேதனையடையும் என
விசும்பலுடன் உருகுகிறேன்
நான் ..

நாணத்தின் பிடியில்
சிக்கிய எனக்கு
கேட்க நா வரவில்லை
நீயருகிலிருக்கும்போது

தூரத்திலிருக்கும் உன்
இதயத்துடிப்பின்
ஓசை கேட்க
ஏங்குகிறது மனம் ..
நிறைவேற்றுவாயா!!!

- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (10-Mar-14, 6:31 pm)
Tanglish : kannamoochi kaadhal
பார்வை : 1009

மேலே