உள்காயம்
நீ கோபத்தில் கொட்டிய வார்த்தைகளை,
ஆத்திரமாய் அள்ளியெடுத்து,
பத்திரமாய் கோணியில் முடித்து,
முதுகிலேயே சுமந்துதிரியும் நான் !
எப்படி உன்னை ஏற்பேன்?
சொல் !!
ஏதாவது வழியுண்டா?
காலத்தை பின்னே சுழற்ற?
அல்லது !
என் நினைவாற்றலை கொஞ்சம் அழிக்க?

