நல்ல நண்பனாக நடிக்கும் என் காதல்

என்னோடு வெகுதுரம் நடக்க வேண்டும் என ஆசை கொள்ளாதே..?

பிறகு

உன் கைகளை பிடிக்க என் கைகள் அடம் பிடிக்கும்...

என்னோடு வெகுநேரம் பேச வேண்டும் என ஆசை கொள்ளாதே..?

பிறகு

நான் பேச வந்த வார்த்தைகள் எல்லாம் நீயே போய் அவளிடம் பேசு என் மவுனத்தை தள்ளி விடும்...

இதனால் தான் சொல்கிறேன் நீ என்னோடு கூட நட்புரவாடதே என்று..?

நட்புரவாடினால்..

பிறகு நல்ல நண்பனை போல் நடித்திடும் என் காதல்......

எழுதியவர் : நரி (12-Mar-14, 7:55 pm)
பார்வை : 91

மேலே