+குறும் பா தேர்தல் களம்பா - 6+
மக்கள் பிரதிநிதி மக்களை பார்க்கவந்தார்
ஐந்து வருடங்களுக்கு பிறகு
தேர்தல்
===================================
குளிர்சாதன அறையை விட்டு வராதவர்
வெயிலில் வாடினார் வியர்வையால்
பிரச்சாரம்
===================================
அள்ளிவிட்டார் வாக்குறுதிகளை
ஜெயித்தால்தானே நிறைவேற்ற
சுயேட்சை வேட்பாளர்
===================================
சொன்னதையே சொன்னான் கிளிப்பிள்ளை போல
போன தேர்தலிலும் இந்தத் தேர்தலிலும்
மீண்டும் ஜெயிக்கப்போகும் அரசியல்வாதி
===================================
பிரியாணி உள்ளே போகாமல் குமட்ட
இலவசத்தை வாங்க சக்தியின்றி ஒட்டிய வயிற்றுடன் விவசாயி
தேர்தல் காலம்
===================================
குப்பையில் கிடக்கட்டும் கொள்கை
சொகுசாய் நடக்கட்டும் வாழ்க்கை
கணவன் ஒரு கட்சி மனைவி ஒரு கட்சி
===================================