தூண்டினில் சிக்கிய மழைத்துளி
அவனோ அனாதை
சிறுவன்
அடித்தாலும் குற்றம் இல்லை
அறுத்தாலும் குற்றம் இல்லை
அப்படிதான்
நினைத்தோம் நாம்
அவனோ பேசா பிறவி
கண்ணீர் மட்டும்
சிந்துவான்
காட்டியா கொடுப்பான்
அப்படிதான்
நினைத்தோம் நாம்
அவன் என்றால்
எவனோ
அவனே நாளை
நம் எமனோ ?
மனிதனின் பெருக்கத்தால்
மரணிக்கும்
மரமே அவன்
அழிக்க தொடங்கினோம்
அதற்காக,
கருவுக்குள் இருக்கும்
சிசுவை
கை விட்டு எடுக்கும்
அவசரம் தான் ஏனோ ?
மண்ணை அள்ளி
நதியை அழித்தோம்
மரத்தை அறுத்து
உயிர் நாடியே அழித்தோம்
நாட்டில் இருக்கும்
விலங்குகள்
காட்டில் இருக்கும்
குழந்தைகளை அழிக்கிறது
அந்நிய நாட்டான்
நம் தங்கத்தை பறித்தான்
நாமோ
இழந்த தங்கத்தை
வாங்க
நம் வளத்தை அழிக்கிறோம்
பணத்தை மட்டும்
சாப்பிட
பழகிய பின்
மிச்சம் மீதி
மரத்தை அழியுங்கள்
இல்லை என்றால்
மீன் பிடிக்கும்
தூண்டில் கொண்டு
நாளை
நீர் பிடிக்க
வேண்டி இருக்கும்