காற்றில் ஆடும் சருகுகள் - 6

மனிதர்களை விட வீடுகள் அதிகமாக வலிகளை உள்வாங்குகின்றன.
-------------------------------------------------------------------------------விடுமுறை தினத்தில் எழுப்பப்படும் குழந்தைகளின் '5 மினிட்ஸ் ப்ளிஸ்' என்ற வார்த்தைகள் நூறு ஆயிரம் சிறகசைப்புகளை தோற்றுவிக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு பனித்திருக்கும் கண்களும் உணர்த்துகின்றன தனது ப்ராத்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டதை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இருக்கை முன் அமர்த்து செல்லும் 3 வயது பெண் குழந்தை 'வெவ்வே' என்று பழிப்பு காட்டுவதில் பயணம் முடிந்து விடுகிறது. நினைவுகள் மட்டும் தொடர்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உதிரும் சொற்களை விட உலரா கண்ணீரும், அதன் சார்ந்த மௌனமும் பெரும் காயம் ஏற்படுத்துகின்றன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காலை நேரத்தில் வெற்று காகிதத்தை விரட்டி சிறு நாயின் சந்தோஷம் மனித சந்தோஷங்களை விட மிக அதிகமாக தெரிகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பேருந்தில் பயணம் செல்பவர்களை விட அவர்களின் கனவுகள் அதிகமாக இருக்கின்றன. அக்கனவுகள் முதல் இழப்பை விட அதிக வலியுடன் இருக்கின்றன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வித்தை தெரிந்த வீரன் மரணத்தின் போது மட்டும் போராடுவதில்லை. மரணம் வரும் வரை போராடுவான். நான் வீரன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தனி மனித வாழ்வு எப்போதும் பிறரால் தீர்மானிக்கப் படுகிறது. உ.ம் பேருந்தில் ஜன்னல் அருகில் இருப்பவன் நமக்கும் சேர்த்து முடிவு செய்கிறான் நமக்கு காற்று வேண்டுமா இல்லையா என்று.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மறுதலித்தலும் நிராகரிக்கப்படுவதும் வீட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டும். ஏன் எனில் அவைகள் உலகங்களால் கற்றுக் கற்றுத்தரும் போது வலிகள் அதிகமாக இருக்கும்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (14-Mar-14, 6:57 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 231

மேலே