இழுத்துவைத்து அறுப்போம்!

தமிழை தமிழாக உச்சரிக்கவேண்டும்-அதன்
தலையறுக்க வருபவரை எச்சரிக்கவேண்டும்...…
எண்திசையும் எம்தமிழை எத்திவைக்கவேண்டும்..-அதை
எரிக்கவரும் கழுத்துக்கு கத்திவைக்கவேண்டும்...

குழந்தைநாவில் இனியதமிழை தொட்டுவைக்கவேண்டும்-அதை
குறையிலாமல் பேசும் வாயில் லட்டுவைக்கவேண்டும்...
எதிரிதமிழில் ஏசுறானா விட்டுவைக்கவேண்டும்-தமிழன்
தமிழில் பேசக் கூசுறானா சுட்டுவைக்கவேண்டும்...!!

இன்றுமுதல் எம்மொழியில் பற்றுடனே இருப்போம்-அதை
இழிந்ததென்று சொல்லும்நாவை இழுத்துவைத்து அறுப்போம்!
உயிரைகேட்டு நின்றால்கூட உடனேநாங்கள் கொடுப்போம்-ஆனால்
உயிர்தமிழை அழிக்கவரின் தலையைநாங்கள் எடுப்போம்..!

எழுதியவர் : கவிஞர் அஸ்மின் (18-Feb-11, 12:13 pm)
சேர்த்தது : கவிஞர் அஸ்மின்
பார்வை : 399

மேலே