நகைக்க மட்டும்
சார் போஸ்ட்.....
(MYIMAMDEEN னிடமிருந்து அவருடைய நண்பர் உமருக்கு கடிதம்... அதில்...)
உமர் : அடடே... எவ்வளவு நாளாச்சு பேசி...பார்த்து....என்ன எழுதிருக்காரு... ம்ம்... "நண்பா... நலம் நலமறிய ஆவல்...ஒரு அவசரத் தேவைக்கு 1 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. மறுக்க மாட்டீர்கள் என்று எண்ணியே கடிதம் அனுப்பியுள்ளேன்.உதவவும்..."
(பதிலுக்கு உமர் அனுப்பிய கடிதம் என்னான்னா....)
" நண்பா....நான் இங்கு நலம்.அது போல் நீ அங்கு நலமா... ஏன் உன்னைப் பற்றி எந்த தகவலும் இல்லை...நண்பர்களிடம் இருந்து உன் முகவரியை தெரிந்து கொண்டேன்...நல்ல உத்தியோகத்தில்..நல்ல சம்பளத்தில் வேலை பார்பதாய் கேள்விப்பட்டேன்... பணத்தை வீண் விரயம் செய்யாதே நண்பா...மிஞ்சும் பணத்தை பேங்க்கில் போட்டு வை. மற்றபடி வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லவும். ஒரு முக்கியமான விஷயம் நான் இன்று வெளிநாடு பயணம் செல்கிறேன்.திரும்பி வர 2 வருஷம் ஆகும்..அதற்குள் நானே உன்னை தொடர்பு கொள்கிறேன்.மேற்படி முகவரிக்கு தொடர்பு கொண்டு விடாதே! நன்றி...! இப்படிக்கு உன் உயிர் தோழன் UMAR.

