மண் வாசனை

வெடிச்சு நிந்த என் நெலத்துல,
கருமேகம் மேல மூடி,
மின்னல் இடி கூட சேந்து,
சத்ததோடு கத்திக்கிட்டு,
மொதல் தூறல் கீழவந்து,
கூச்சதோடு சுட்டமண்ண,
ஆசையோடு தொட்டதுமே,
மண் வாடை மயக்குறதே,
நெலத்துப்பக்கம் இழுக்குறதே;

தடுப்பு கட்டி நீர் வாத்து,
ஏர் எடுத்து காளை பூட்டி,
மணி சத்தம் மயக்கிடவும்,
எளகி நிந்த நெலம் பொறட்டி,
சேத்து மண்ணு கைய்யோட,
கரைச்சு களியக் குடிச்சுபுட்டு,
வெதை வெதச்சு, நாத்து நட்டு,
ரா முழிச்சு பயிர காத்து,
வெட்டும் வேள வந்திட்டுதே;

நெல் மூட்டை தோள் ஏத்தி,
மாட்டு வண்டி மொத்தம் ரொப்பி,
கட்டினவ கண் சிமிட்ட,
பொறப்பட்டுட்டேன் சந்தைக்கு நான்,
வித்துப்புட்டு வாங்கிடுவேன்,
வண்ண சேலை வளையலுடன்,
கள்ளு கொஞ்சம் அடிச்சுபுட்டு,
பொழுதோட வந்துடுவேன்,
என் ராசாத்திய கொஞ்சிடுவேன்!

சம்பத் 1st March 2014

எழுதியவர் : சம்பத் கல்கத்தா (15-Mar-14, 1:58 pm)
பார்வை : 83

மேலே