இடிச்சத்தம்

அரைத் தூக்கத்தில்
அலறியபடி விழித்தேன்
அறைஎங்கும்
அப்பியிருந்தது இருட்டு!

வானத்தை உடைத்துக்கொண்டு
இடிச்சத்தம்
மேகத்தை பிழிந்துக்கொண்டு
பேய்மழை!
இருட்டை கிழித்துக்கொண்டு
மிரட்டும் மின்னல் !

மழைச்சாரல் நனைத்து
சில்லிட்டது உடல்!
காதுக்குள் நுழைந்து
தூக்கத்தை தொலைத்தது
இடிச்சத்தம்!

கண்கள் மிரள
காதுக்குள் குளிர
நடுங்கியபடி அழுதேன் !

திடுக்கிட்டு விழித்தாள்
அன்னை !-அவள்
மார்போடு அணைத்தாள்
என்னை!

பயம் நீங்கியது
கண்கள் தூங்கியது
அப்போதும் கேட்டது
சத்தம்! - அது
இடிச்சத்தம் இல்லை!

அவள்
இதயத்தின் சத்தம்!-காதுக்குள்
இனிய தாலாட்டாய்!!

எழுதியவர் : பாரதி செந்தில்குமார் (15-Mar-14, 2:28 pm)
பார்வை : 96

மேலே