ஏலேலோ ஐலசா-ஐலசா பாட்டு-சொசாந்தி
ஏலேலோ ஐலசா... ஐலசா பாட்டு
===============================
ஏலேலோ ஐலசா... ஏலேலோ ஐலசா...
ஏலேலோ ஐலசா... ஏலேலோ ஐலசா...
ஐலேசா... ஐலசா... ஐலேசா... ஐலசா....
கட்டு மரத்தோணியிலே ஏலேலோ ஐலசா
துடுப்பு போட்டு தோணி ஓட்டி ஏலேலோ ஐலசா
வங்கக் கடலில் வல வீசி ஏலேலோ ஐலசா
மீன்புடிக்க போகையிலே ஏலேலோ ஐலசா
கைவலிச்சும் பாடலியே ஏலேலோ ஐலசா
இளங்கால சூரியனும் ஏலேலோ ஐலசா
எட்டிப் பாக்கும் நேரத்துல ஏலேலோ ஐலசா
நெலத்துலதா(ன்) நீர பாய்ச்சி ஏலேலோ ஐலசா
பொன் னேரோட்டும் போதுதானே ஏலேலோ ஐலசா
ஒழவனுந்தா(ன்) மறந்ததென்ன ஏலேலோ ஐலசா
அதிகால பொழுது வேள... ஏலேலோ ஐலசா
பட்சியுந்தா(ன்) கூவும் கால... ஏலேலோ ஐலசா
வயலுக்குள்ளே தண்ணி பாய ஏலேலோ ஐலசா
ஏத்தம் எறக்கிறாங்க ஏலேலோ ஐலசா
வலி மறைய பாடலையே ஏலேலோ ஐலசா
மூட்டமூட்ட யாபளுவும் ஏலேலோ ஐலசா
முதுகுலதா(ன்) தூக்கி வெச்சி ஏலேலோ ஐலசா
மூச்சு முட்ட சொம சொமந்து ஏலேலோ ஐலசா
கூலிக்காரன் நடக்கையிலே ஏலேலோ ஐலசா
சொம மறக்க பாடலியே ஏலேலோ ஐலசா
கட்டு கட்டா நாத்தெடுத்து ஏலேலோ ஐலசா
கழனியிலே ஆணும் பெண்ணும் ஏலேலோ ஐலசா
பாவி பாவி நடவு நட்டு ஏலேலோ ஐலசா
அசதி வந்து அணைச்ச போதும் ஏலேலோ ஐலசா
பாட்டுகட்டி பாடலியே ஏலேலோ ஐலசா
=============================================
எங்கெங்கோ நானுந்தானே ஏலேலோ ஐலசா
தேடித்தானே பாத்துபுட்டேன் ஏலேலோ ஐலசா
எங்கேயும் காணலியே ஏலேலோ ஐலசா
தெம்மாங்கும் மோகனமும் ஏலேலோ ஐலசா
எங்கெங்கும் பாடுறாங்க ஏலேலோ ஐலசா
பாரங்கொறைய வலி மறைய ஏலேலோ ஐலசா
பாடும் கலை மறந்ததென்ன ஏலேலோ ஐலசா
வலியுமிப்போ கூடிப் போக ஏலேலோ ஐலசா
கொறைக்க வழி தோணாமதா(ன்) ஏலேலோ ஐலசா
நானுந்தான் பாடுகிறேன் ஏலேலோ ஐலசா
சொம கொறைய வலி மறைய ஏலேலோ ஐலசா
பாடி வெச்சா தப்பு இல்லே ஏலேலோ ஐலசா
பாடுகிறேன்... பாடுகிறேன் ஏலேலோ ஐலசா
வலிபோன தெசையென்ன ஏலேலோ ஐலசா
மனசு லேசான மாயமென்ன ஏலேலோ ஐலசா
சேர்ந்தேதான் பாடுங்கைய்யா ஏலேலோ ஐலசா
சோர்வெல்லாம் போகுதைய்யா ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஐலசா... ஏலேலோ ஐலசா...
ஏலேலோ ஐலசா... ஏலேலோ ஐலசா...
ஐலேசா... ஐலசா... ஐலேசா... ஐலசா....