திருநங்கை

மனதில்
ஊனம் கொண்ட
மனிதர் வாழும்
தேசம் இது...

உடல்
ஊனம் என்றால்
செயற்கை உறுப்புமுண்டு
உன் மன ஊனத்திற்கு...

பெண்(ஆ)னே
எதிர்ப்பால் மீது
நீ கொண்ட
ஈர்ப்பால்...

இன்று
புதுப்பாலாய்
திரிந்து நிற்கிறாய்
அரவாணியாய்...

சிற்பி
அவனின் கவனச்
சிதறலால் செதுக்கிய
சிலையோ நீ...

ஆண் ஜாதி
பெண் ஜாதி
என இரண்டு
இருக்க...

ஆணில் பாதியுமாய்
பெண்ணில் பாதியுமாய்
புது ஜாதியாய்
நீ....

முழுமை
பெறுவது எப்போது ...

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (15-Mar-14, 4:12 pm)
Tanglish : thirunangai
பார்வை : 1183

மேலே