இரவு விளக்குகள்

விடிகாலை நேரம் உறக்கம்
கலைந்து எழுந்து கொண்டேன்
என் அறையில் ஒரேயொரு
இரவு விளக்கு மட்டும் தனியே
ஒளிர்ந்து கொண்டிருந்தது...

நம் உறக்கத்தை உற்றுப்பார்த்து
கொண்டே இருக்கின்றன இந்த
இரவு விளக்குகள் என்ற என்னத்தில்
என் மனதும் லயித்து இருந்தது...

இந்த இராப் பொழுதிலே எத்தனை
ஆயிரமாயிரம் விளக்குகள் விழித்து
கொண்டிருக்குமோ...

நம் இரவு உறக்கத்தை
உலவு பார்க்க...

இரவு விளக்குகள் நம் உறக்கத்தின்
துணைவன் போலும், இவைகள்
தமக்கு தாமே முகத்திரை இட்டு
தன் ஒளியை மறைத்துக் கொள்கிறது...

இரவு விளக்குகள் நமது
காதுகளுக்கு கேட்காத
எதையோ முனுமுனுக்கின்றன
ஒரு வேலை தமக்கு தானே
எதை எதையோ பேசிக்
கொள்கின்றன போலும்...

இரவு விளக்குகளின் வெளிச்சமோ
சிறுமியின் பிஞ்சு விரல்களை போல
எத்தனை மிருது, எத்தனை ஈர்ப்பு...

இரவை கடந்து செல்ல உறக்கம்
என்ற ஒற்றைப் படகே...!
முடிவில்லாமல் யாவர் அறைகளிலும்
மிதந்து நீந்தியபடியே...!

இரவின் பேராற்றில் செல்லும்
உறக்கம் என்னும் இந்த படகு
சலனம் இல்லாது நீந்துகிறது
இரவு விளக்குகளின் துடுப்புகளால்...

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (15-Mar-14, 5:43 pm)
Tanglish : iravu vilakkukal
பார்வை : 1742

மேலே