உனக்காக

காதலியே !
உனக்காக...
வானத்தை
வில்லாய் வளைப்பேன்
நிலாவை
பொட்டாய் தருவேன்
விண்மீன்களை
மூக்குத்தியாய் அமைப்பேன்
என்று எனக்கு பொய்சொல்ல
தோணவில்லை...
உனக்காக
என்னை நானே
மாற்றிக்கொள்ளத்தயார்
என்
படிப்பு போதவில்லையா?
என்
பதவி போதவில்லையா?
என்
வருமானம் போதவில்லையா?
இல்லையென்
அன்பு புரியவில்லையா?
எதை வேண்டுமானாலும்
உனக்காக
நான்
அதிகரிக்கத்தயார்
உன்
பிரிவைத்தவிர!...