நல்லது தானே

கவர்ச்சியும்
கை கலப்பும்
எப்போதும்
கைகோர்த்து
காசு பார்க்கும்
சினிமாவில்

மக்களின்
மனம் கவர்ந்த
நடிகன்
நடிக்கிறான்
சண்டைக் காட்சிகளில்
டூப் போட்டு.

நடிகனின்
மனைவியோ
வாழ்கிறாள்
பிரசவத்தை
வாடகைத் தாயிடம்
ஒப்படைத்து.

பெற்ற தாய்
விலை போனாலும்
நடிகர்களின் வாழ்வில்
மற்ற நடிகர்களும்
வாழ்கிறார்களென்பது
நல்லது தானே!

எழுதியவர் : கோ.கணபதி (18-Mar-14, 11:55 am)
Tanglish : nallathu thaane
பார்வை : 61

மேலே