மண்ணில் ஓர் மின்னல் 555

பிரியமானவளே...
தினம் என் நித்திரையில்
ஒன்றோடு ஒன்றாகும்...
நம் இதயங்களின்
ஓசை...
பனித்துளியை
தன்னில் தாங்கிய...
மலரின் இதழ்கள் போல
நம் முத்தத்தின் சப்தங்கள்...
மௌனம் கொள்ளும்
நம் விழிகள்...
தவறி விழுந்த
பனி துளி போல்...
என்னில்
ஒரு துளி...
திடுக்கிட்டு
விழிகிறேனடி நள்ளிரவில்...
நீ தண்ணீர் தெளித்து
என்னை எழுப்புவதை போல...
என் மடிமீது நீயும்
உன் மடி மீது நானும்...
உறங்கும் நாளேதடி
கண்ணே...
கனவில் வருபவளே...
நிஜத்தில் என்
மனைவியாக...
என்னருகில் நீ
வேண்டுமடி.....