வேதாளதேவதை-வித்யா

வந்தாள்......

மடை திறந்த
வெள்ளம்போல
வாய்திறந்து
வார்த்தைகளை
கொட்டினாள்.........
ஆம்.....
எனை திட்டினாள்......!

கண்மூடி திறப்பதற்குள்
காணாது போய் விட்டாள்........

சுற்றும் முற்றும்
தேடினேன்.........
சற்று தூரத்தில்
ஒரு முருங்கைமரம்
எனை முறைத்து
பார்த்துக்கொண்டிருந்தது...........!



எதையோ புரிந்து
கொண்டவனாய்........
முருங்கை மரம் நோக்கி
நடக்க தொடங்கினேன்........!

எழுதியவர் : வித்யா (18-Mar-14, 8:58 pm)
பார்வை : 118

மேலே