வாழ்க்கை - இயலாதது

அன்பு அளவிட முடியாதது
ஆற்றல் வகையிட முடியாதது
இளமை தடையிட இயலாததது
ஈதல் இடமறியாதது
உள்ளம் உணர்விலடங்காதது
ஊக்கம் எல்லை இல்லாததது
எண்ணம் ஏட்டிலடங்காதது
ஏற்றம் எண்ணிக்கையில் அடங்காதது
ஐயம் ஐம்புலன்களிலடங்காதது
ஒருமை தவிப்பிலடங்காதது
ஓவியம் தூரிகையிலடங்காதது
ஔதாரியம் மனதில் அடங்காதது
ஃ ஆய்தத்திலடங்காதது

எழுதியவர் : (18-Mar-14, 8:47 pm)
பார்வை : 78

மேலே