பரந்து விரிந்த வானில்

பரந்து விரிந்த வானில் ...
சிறகிருக்கும் பறவைகளும் சிறகடித்து சிறிதூரம்
பறந்தபின் உட்காரும் சிறுநேரம் ஓரிடத்தில்
உறக்கத்தில் பலரிருக்கப் பறந்த விமானம்
பல நாட்கள் கடந்த பின்னும்
புலப்பட வில்லை மனிதர்தம் கண்களுக்கு
பலர்கூடி அலைகின்றார் வழியெங்கும் தேடி
பல்லுயிர்கள் யார்பசிக்கு எங்கே இரையானார்
என்றே யார் அறிவார் இவ்வுலகில்
சுற்றம் இழந்து வாடுகிறார் சொந்தங்கள்
எத்தனைதான் விஞ்ஞானம் முன்னேறி விட்டாலும், வித்தகனும் முட்டாள் தானென்று சொல்கின்றான்
பித்துப் பிடித்த வித்தகன் ஒருவன்