கல்லறை
என்னவளே
உனது கண் கருவிழிக்கு
களவாடப்பட்டு கைதியானவன்
உன் விரல்பட்ட இடத்தில்
நீர் பூச மறந்து
நித்திரை தொலைத்தவன்
நித்தம் துடித்தவன்
வளைசங்கு கழுத்தில்
ஒட்டியிருக்கும் பாசியாய்
பிறப்பெடுக்காத பாவிநான்
குறுமுயல் காதுகளை
ஒத்திகைப் வார்த்தால் போல்
இரு அழகு மடல்கள்
நெற்றி வியர்வையை
எட்டிப் பிடிக்க தோணும்
நெற்றி தொட்ட உரோமத்தை
தொட்டு விட தோணும்
பஞ்சு மெத்தை பாதத்தில்
பள்ளிகொள்ள தோணும்
படுத்துறங்க வேணும்
அலைபாயும் நெஞ்சத்தை
அணைப்போட்டு
எத்தனை நாட்கள் தடுப்பது
அடுக்கிவிட வேண்டும் ஆசையை
உரைத்து விடவேண்டும்
உண்மைக்காதலை
உள்ளத்து உந்துதலால் சென்றேன்
உறவாழிடம்
கண்பட்ட காதலியே
உன்கண் பேசும் வார்த்தை புரியாது
காயம் பட்ட காதலன்
ஆறுதலாய் இதழ் விரித்து
ஒரு வார்த்தை என்றதும்
அண்ணன் என்றாள்
அவன் காயம் நீங்கியது
(கல்லறையில் )
இளையகவி