அறுந்த இசைகருவி

அவளுக்கு இசை பிடிக்கும்..
அவனுக்கு ரசிக்க பிடிக்கும்..

அவள் இசைக்க தொடங்கினாள்..
அவன் ரசிக்க தொடங்கினான்...

மீட்டிய நாண்.. அறுந்து
மடி விழுகையில்... அவன்
உயிரற்று இருந்தான்....

ஆம்...
அவள் இசைத்து முடித்திருந்தாள்..
அவன் ரசிப்பையே முடித்திருந்தான்...

இசையற்ற அவள் வாழ்வும்...
இவள் அற்ற அவன் வாழ்வும்...

நாண் இல்லாத இசைகருவி...

எழுதியவர் : கவிதை தாகம் (19-Mar-14, 12:06 pm)
சேர்த்தது : தசரதன்
பார்வை : 69

மேலே