மழைக்காதலன்
தூவும் மழையே
இதமாய் நெஞ்சை நனைத்து
உன் மென்மை பாதங்களால்
வீதியிலே நடனமாடுவது ஏனோ ??
கள்வனாய் என் மனதையும் திருடி
காதலியாய் என் நெஞ்சை நனைத்து
என்னையும் வீதியிலே ஆட விட்டதும் நீனோ ??
விழியோரம் உன்னை அணைக்கிறேன்
வார்த்தைகளால் உன்னை வர்ணிக்கிறேன்
உன்னோடு உரையாடத்தான் நினைக்கிறேன்
உயிர் இல்லா ஓவியமாய் நீ இருப்பதால் தான்
கற்பனையால் உன்னை நேசித்தே வாடிப்போகிறேன் ??