என் சிட்டுகள் எங்கே

என் சிட்டுகள் எங்கே?
(சிட்டுகள் தினம்)
வானம் எங்கும் தேடுகிறேன்—உன்
கானம் எங்கே வாடுகிறேன்.
கீச்செனும் ஒலியைக் கேட்டிடவே.
கையில் நானுன்னை தொட்டிடவே.
வானம் எங்கும் தேடுகிறேன்—உன்
கானம் எங்கே வாடுகிறேன்.
(வானம்)
சிறு சின்னம் வரைந்து பாடிட மனதில்
பாடல்கள் எனக்கும் போதவில்லை.
தினம் கூரையில் ஒலிக்கும் குரலில் இனிக்கும்
இனிமை சுகமோ மறக்கவில்லை.
எந்தன் சிறகுகள் விரித்து தேடும் கதி
எது தோணவில்லை ஒண்ணும் கூடவில்லை.
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை..
(வானம்)
ஊருக்குள் மரங்கள் ஒழிந்ததுவோ!
கூரைகள் மறைந்தும் போனதுவோ!
கட்டிடம் பெருகி போக்கியதோ!
காந்தலை வீசி ஓட்டியதோ!
நீ கூடும் கூட்டம் பாடும் பாட்டும்
எனது நிம்மதி ஆனதது.
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை
(வானம்)
சிந் திய தானியம் யாருக்கிதோ
சிதறி வீணே கிடக்குதிங்கே.
அந்தியும் மாலையும் தேடியும் உன்னை
சிந்தைக்குள் எண்ணி ஏங்குறேனே.
சின்னச் சிட்டே கண்ணில் பட்டே தினம்
என்னைச் சேர்ந்தால் இன்பமடி.
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை
(வானம்)
கொ.பெ.பி.அய்யா.
கரிசல் மண்ணில் ஒரு காவியம்//////185038