பொன்னந்தி பொழுது -சே பா

அடிவானம் பழுத்திருக்கு
ஆசையும்தான் பூத்திருக்கு
காண்போரை கவிழ்த்து விடும்
காட்சிப்பிழை ஏதுமின்றி,

மஞ்சள் வெயில்தனிலே
புது உலகை காண்கின்றேன்
இதமான சூட்டினிலே
சுட்டுத்தான் வீழ்கின்றேன்

முடிந்த பகலுக்குள்
விடியும் இரவோ!

களைத்த சூரியனோ
முடிந்த பொழுதை அள்ளி
முகில் போர்வைக்குள்
மூடிதான் உறங்காதோ!

பழுத்த சூரியனை
கொத்தி திங்க ஜோடி புறா
விரைந்துதான் செல்கிறதோ!

பச்சி பறந்த இடம் தேடி
படுக்க இடம் தேடி வாராதோ!

களவாணி பயகுயில்
காக்கை கூட்ட
களவாட வாராதோ!

மாலை நேர தென்றலிலே
மல்லி மனம் வீசாதோ
காடு மேடு சென்றவரெல்லாம்
கட்டி வீடு சேர்வாரோ!

தூரத்து அடிவானமும்
புவியும் நெடுந்தூரம் சென்று
முத்தமிட்டு மகிழ்கிறதோ!

நிலவுக்கு வருகை தந்து
விடைபெறும் சூரியனோ
பகலை அள்ளிக்கொண்டு
இரவுக்கு வழிவிடுமோ!

சூரியன்!
மதியின் வருகை கண்டு
முகிலுக்குள் மூடி
மறைகிறதோ!

இறைசல்களுக்கு
இடைவேளை தந்து
புவிக்கு புது யுகம் தந்த
நேரம் இதுவோ!

மாலைநேர மயக்கத்தில்....

=============================================

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (19-Mar-14, 1:22 pm)
பார்வை : 202

மேலே