அம்மாவின் அன்பு மொழி

அரவணைத்த படி
அம்மாவின்
ஆதரவான
அன்பு மொழி.....

அதோ
அடர்ந்த மரங்களின் நிழலை தொடர்ந்து
அங்கே தெரியும்
அழகிய வெளிச்சம்.....!

அமைதியான இந்த இயற்கை சூழ்நிலையில்
அழகான அந்தக் குயில் ஓசை..

அழாதே நானிருக்கிறேன் செல்லம் என்றபடி
அன்னையவள் சொல்லும் தமிழ் ஓசை......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (19-Mar-14, 4:29 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : ammaavin anbu mozhi
பார்வை : 117

மேலே