கண் போனகாலத்தில்
நான் கல்லூரியில் பொறியியல் படித்துகொண்டு இருந்தேன். பொதுவாக இயந்திரவியல் படிக்கும் எனக்கு கணிப்பொறி மீது ஆர்வம் குறைவு - ஆர்வம் குறைவு என்பதை விட கணிப்பொறியை உபயோகபடுத்தும் வாய்ப்பு குறைவு என்பதே நிஜம்.
இந்த சூழ்நிலையில் நான் C language பிரக்டிகல் பல்கலைகழக தேர்வு - நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்தும் - ப்ரோக்ராம் மனசுல நிற்காத காரணத்தினால் பிட் அடிக்க - பிட் ரெடி பண்ணி யாருக்கும் தெரியாம பிட் அடிச்சு முடிச்சிட்டேன். ஆனாலும் அந்த ப்ரோக்ராம் ரன் ஆகல.
எங்க கம்ப்யூட்டர் லேப்ல இருந்த வாத்தியாருக்கு - நான் ப்ரோக்ராம் எழுதுனதுல சந்தோசம் - ஆனா அது ரன் ஆகலன்னு வருத்தம் - (அவருக்கு தெரியாது நான் பிட் அடிச்சு தான் இத எழுதினேன்னு)
எல்லாருமே வந்து என் ப்ரோக்ராம் செக் பண்ணாங்க - எல்லாமே ரைட் ஆ தான் இருக்கு - ஆனா ரன் ஆகல - (ஆட்டோ ஸ்டார்ட் பண்ணி கியர் போட்டு - வண்டி மூவே ஆகலன்னு படத்துல வருதே அந்த மாதிரி )
சரி - அந்த பிட் என்னசுங்குறதுதான் கதை - எனக்கு கல்யாணம் முடிஞ்சு - ஒரு பத்து நாள் லீவ்ல வீட்ல நானும் என் அம்மணியும் இருந்த ஒரு சாவகாசமான நாள்ல - என் கல்லூரி கால சூட்காஸ் திறந்து பார்த்துட்டு இருந்தோம் - அப்ப அந்த பிட் என் வீட்டுகார அம்மா கைல மாட்டுச்சி (பாத்துக்கங்க அந்த பிட் நான் எழுதனது 2000 வருஷம் - அது என் வீட்டம்மா கிட்ட மாட்டுனது 2010 ம் வருஷம்)
அத படிச்சவங்க C language க்கு கூட பிட்டா? அப்படிங்கிற கேள்வி கேட்டாங்க (என் கஷ்டம் அவங்களுக்கு தெரியாது) நானும் எதார்த்தமா - பிட் அடிச்சது உண்மைதான்னு ஒத்துகிட்டேன். (தம்பதிகளுக்குள் உண்மை பேசனுமேன்னுதான்) அப்போ தான் அடுத்த கேள்வி கேட்டாங்க - இந்த ப்ரோக்ராம் ரன் ஆகி இருக்காதே ? ஆமாம் உனக்கெப்படி தெரியும்ன்னு கேட்டேன் (எனக்கு பயங்கர ஆச்சரியம் - இவளுக்கு எப்படி தெரியும்ன்னுதான்)
stdio க்கு பதில் studio அப்படின்னு டைப் பண்ணா எப்படி execute ஆகும்ன்னு கேட்டாங்க.... (பத்து வருஷம் இது தெரியாம வாழ்ந்திருக்கோமேன்னு கொஞ்சம் கேவலமா இருந்தாலும்) பட்ட அவமானத்த வெளிய சொல்லிடலாமேன்னு தான் .... உங்க கிட்ட சொல்லறேன்
பின் குறிப்பு:
stdio என்றால் standard input/output என்று அர்த்தம்.